மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டு, 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதனிடையே, இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவித்தது மத்திய அரசு
May 01, 2025
0
Tags