ஈரோடு மஞ்சள் மாநகரிலுள்ள ஈரோடு ஏசி ஹால் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது.குத்துவிளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் பி.பூர்ணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் டி.சஜிதாகுமாரி அனைவரையும் வரவேற்றார்.மாநில மகளிரணி தலைவி ஜெயாஸ்ரீதரன்,சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் குழுவின் மாநிலத் தலைவர் டாக்டர்.பி.பாலசுப்பிரமணியன்,மாநில கௌரவத் தலைவர் பி.கோபால்,மாநில துணைத் தலைவர் டாக்டர்.எம்.பேபி,மாநில கௌரவ துணைத் தலைவர் ஏ.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து சங்கத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தனர்.
ஈரோடு லோட்டஸ் பல்நோக்கு மருத்துவமனை நிறுவனர்.மருத்துவர் சகாதேவன்,எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம்,ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணசாமி, சென்னை நியூஸ்21 தேசியத் தொலைக்காட்சி எஸ்.அச்சுதனன், குருஜியர் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவர் குறிஞ்சி ப.சந்திரசேகரன் ,மற்றும் ஜெய் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.மாநாட்டு முகப்பில் பாரதிபுத்தகாலயம் ஈரோடுகிளை சார்பாக புத்தகக்காட்சி நடத்தப்பட்டது.சிறப்புவிருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.காஷ்மீர் பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து பலியான அப்பாவி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சிம்லாவில் நடைபெற்ற 2024-25 கல்வியாண்டிற்கான தேசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற ஈரோடுமாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் இருவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டன.
தேசிய அளவில் நடைபெற்ற கடுகு ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு சாதனைபடைத்த 17 மாணவ,மாணவியருக்கு கலை மற்றும் பண்பாட்டுத்துறை மாநிலத் தலைவர் ஜெ.வெங்கடேஷ் தலைமையில் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.இளங்கோ சங்க உறுப்பினர்களுக்கு அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் உரையாற்றினார்.
திருப்பத்தூர் பி.ஆர்.ஓ.மீது உள்ள புகார்களை குறுஞ்செய்தி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநாட்டில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.துரைராஜ் நன்றி கூறினார்.நாட்டுப்பண் பாடலுடன் மாநாடு நிறைவுபெற்றது.
சி.பரமேஸ்வரன் மற்றும் திண்டுக்கல் மணிகண்டன் ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்தளித்தனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாநில அமைப்பாளர் ஈரோடு வி.ஏ.பூபாலன் தலைமையில் எம்.அஷ்ரப் அலி,கே.துரைராஜ்,ஆர்.சங்கர்,நரசிம்ம மூர்த்தி,மின்னல் நாகராஜ் செய்திருந்தனர். நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்...