ஈரோடு:பூ கடைக்காரர் போக்சோவில் கைது

0

ஈரோடு, மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்த பூ கடைக்காரர் அப்துல் ரஹ்மான், 32; திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி உடல்நிலை பாதிக்கவே, பெற்றோர் மருத்து-வமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அப்துல் ரஹ்மான் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top