பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

0
கோவை, தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 109. விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கடந்த 2021-ல் கோவை வந்த பிரதமர் மோடி, பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். தி.மு.க. பவள விழாவை முன்னிட்டு பாப்பம்மாளுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ பாப்பம்மாள்(109) காலமானார்கடந்த 2021ம் ஆண்டு, கோவையை சேர்ந்த பாப்பம்மாளுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது கடந்த 2021ல் கோவை வந்திருந்த பிரதமர் மோடி, பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top